Saturday 24 September 2011

சாதி,மதம் ஒழிய காதல் திருமணம் செய்யுங்கள்! தனிமனித சுதந்திரம் காக்க காதலர் கழகத்தில் சேருங்கள்!

          சாதி,மதம் ஒழிய காதல் திருமணம் 
                                                                          செய்யுங்கள்! 

   தனிமனித சுதந்திரம் காக்க காதலர் கழகத்தில்
                                                                               சேருங்கள்!

            தமிழ்நாடு காதலர் கழகம் துவக்கமும் அவசியமும்

    நாம் விரும்பிய ஒருவர், நம்மை விரும்பவில்லை என்றாலே நமக்கு வேதனையாக இருக்கும் போது, இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய பிறகு, பெற்றோர்களாளோ, மற்ற காரணங்களாளோ இணைய முடியாதபோது அவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறபோது, அவர்களுக்கு எந்தவகையான இடையூறு வந்தாலும் அதை முறியடித்து, அவர்கள் வாழ்வில் இணைய உதவுவதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்.

                      உண்மையான காதல் 
ஆண் - பெண் 20 வயதுக்குமேல் நல்ல கல்வி, உலக அறிவு ஏற்பட்டபின், தங்கள் பிரச்சனைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொள்கிற தன்னம்பிக்கை, தெளிவு, பக்குவம் இவை அனைத்தும் இரு பாலருக்கும் வந்தபின் ஏற்படுவதே உண்மையான காதல் ஆகும். இதுவே சுதந்திரமானதுமாகும்       - தந்தை பெரியார்
 
            காதல் என்பதன் வரையறை
     காதல் என்பது என்ன பொருள் என்றெல்லாம் நாம் ஆய்வுசெய்ய தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. ஒருவர் தன் வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமைக்கு பெயர் “காதல்”. என்பதுதான்  தமிழ்நாடு காதலர் கழகத்தின் வரையறை.

            காதல் திருமணங்களை ஆதரிப்பது ஏன்?

    காதல் திருமணங்களால் சாதி, மத உணர்வுகளைத் தகர்த்து, சதி கொடுமை, மத மோதல்கள் தவிர்த்து, ஆரோக்கியமான சமநிலை சமுதாயம் உண்டாவதற்கு காதல் உறுதுனையாக இருக்கிறது. பெண்களுக்கு காதலால் சுயசிந்தனை, தானாக முடிவெடுக்கும் தன்மை, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை வளர்கிறது.

             தமிழ்நாடு காதலர் கழகத்தின் நோக்கம்

     காதல் செய்பவர்கள், காதல் திருமணம் செய்தவர்கள், காதலை ஆதரிப்பவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, சமூக
     அக்கரையுள்ள ஒரு பெரிய அமைப்பாக மாற்றுதல்,

     சாதிகள் ஒழிவதற்காகவும், பெண்ணுரிமை கிடைப்பதற்காகவும், காதல் திருமணங்களை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல்,

      தங்கள் வாழ்க்கைத் துணைவரை தாங்களே தேர்வுசெய்யும் உரிமை அனைவருக்கும் உண்டு. அவ்வாறு தேர்வு செய்யும்
     போது, ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு துணை நிற்பது.

           விரைவில் துவக்கம்

 விரைவில் துவங்க இருக்கும் இந்த தமிழ்நாடு காதலர் கழகத்தில், காதலை ஆதரிக்கும் அனைவரும் இணையுங்கள்.

    உங்களுடைய ஆதரவுகளையும், ஆலோசனைகளையும் வழங்க தொடர்பு மின்னஞ்சல் :
kathalarkazhakam@gmail.com,
       
வலைப்பூ முகவரி : www.kathalarkazhakam.blogspot.com,

Sunday 3 July 2011

விரைவில் துவக்கம் .....

சாதி,மதம் ஒழிய காதல் திருமணம் செய்யுங்கள்! 

தனிமனித சுதந்திரம் காக்க காதலர் கழகத்தில் சேருங்கள்!
            தமிழ்நாடு காதலர் கழகம் துவக்கமும் அவசியமும்

    நாம் விரும்பிய ஒருவர், நம்மை விரும்பவில்லை என்றாலே நமக்கு வேதனையாக இருக்கும் போது, இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய பிறகு, பெற்றோர்களாளோ, மற்ற காரணங்களாளோ இணைய முடியாதபோது அவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறபோது, அவர்களுக்கு எந்தவகையான இடையூறு வந்தாலும் அதை முறியடித்து, அவர்கள் வாழ்வில் இணைய உதவுவதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்.

                      உண்மையான காதல் 
ஆண் - பெண் 20 வயதுக்குமேல் நல்ல கல்வி, உலக அறிவு ஏற்பட்டபின், தங்கள் பிரச்சனைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொள்கிற தன்னம்பிக்கை, தெளிவு, பக்குவம் இவை அனைத்தும் இரு பாலருக்கும் வந்தபின் ஏற்படுவதே உண்மையான காதல் ஆகும். இதுவே சுதந்திரமானதுமாகும்       - தந்தை பெரியார்

            காதல் என்பதன் வரையறை
     காதல் என்பது என்ன பொருள் என்றெல்லாம் நாம் ஆய்வுசெய்ய தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. ஒருவர் தன் வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமைக்கு பெயர் “காதல்”. என்பதுதான்  தமிழ்நாடு காதலர் கழகத்தின் வரையறை.

            காதல் திருமணங்களை ஆதரிப்பது ஏன்?

    காதல் திருமணங்களால் சாதி, மத உணர்வுகளைத் தகர்த்து, சதி கொடுமை, மத மோதல்கள் தவிர்த்து, ஆரோக்கியமான சமநிலை சமுதாயம் உண்டாவதற்கு காதல் உறுதுனையாக இருக்கிறது. பெண்களுக்கு காதலால் சுயசிந்தனை, தானாக முடிவெடுக்கும் தன்மை, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை வளர்கிறது. காதல் திருமணங்களால் சாதி, மதம் ஒழிகிறது.  ஜாதகம், செவ்வாய்தோசம் போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிகிறது. ஒரே சாதிக்குள் காதல் திருமணம் நடந்தாலும் கூட அதில் பெண்ணுரிமை இருக்கிறது. எனவே, சமத்துவ சமுதாயம் உருவாக காதல் திருமணங்கள் காரணமாக இருக்கிறது.